அரசு பள்ளியை தரம் உயர்த்த கோரி பஸ்சை சிறைபிடித்து மாணவர்களுடன் சேர்ந்து கிராம மக்களும் போராட்டம்
அரசு பள்ளியை தரம் உயர்த்த கோரி மணப்பாறை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்களுடன் சேர்ந்து கிராம மக்களும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை,
மணப்பாறை அருகே கார்வாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 143 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் நடுநிலைக்கல்வியை முடித்ததும் உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று கூறி அந்த கிராம மக்கள் கடந்த 2014-ம் ஆண்டே அதற்கான தொகையை கல்வித்துறையிடம் செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில் பள்ளி தரம் உயர்த்தப்படும் என்று காத்திருந்த நிலையில் கடந்த ஆண்டும் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அருகில் உள்ள ஊரின் பள்ளியை தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியானது.
இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பள்ளி தொடங்கியதுமே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் புத்தக பைகளை அருகில் உள்ள கோவிலில் வைத்தனர். பின்னர் வகுப்புகளை புறக்கணித்து அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவ, மாணவிகளின் பெற்றோரும், கிராம மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், நல்லதம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் தங்கள் பள்ளி தரம் உயர்த்தப்படுவது குறித்து உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர், மருங்காபுரி தாசில்தார் கருணாகரன், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்பதாகவும், வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியதை அடுத்து மாணவ, மாணவிகள், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நாங்கள் படிக்கும் பள்ளியை தரம் உயர்த்திட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் அமைதி பேச்சுவார்த்தை நடந்த போதும் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய படியே இருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story