சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்


சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:15 AM IST (Updated: 14 Aug 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திண்டுக்கல், 


நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றுகிறார். இந்த விழாவின் போது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு விருதுகளும், வீரதீர செயல்களில் ஈடுபட்ட போலீசாருக்கு பதக்கங்களும் வழங்கப்படும். இந்த விழாவின்போது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. சுதந்திரதின விழாவையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நடைபெறும். இதற் காக போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் தற்போது இருந்தே பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று, பழனி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை செய்தனர். 

Next Story