சேலத்தில் சுதந்திர தினவிழா: கலெக்டர் நாளை கொடியேற்றுகிறார் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
சேலத்தில் நாளை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ரோகிணி கொடியேற்றுகிறார். இதையொட்டி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம்,
நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம் நடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு காலை 9.20 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார். பின்னர் கலெக்டர் ரோகிணி, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிப்பதுடன், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சேலம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் துணை போலீஸ் கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீசாருடன் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் சேலம் ரெயில்வே போலீசார், பயணிகளை சோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரெயில்களில் அனுப்பப்படும் பார்சல்களும் தீவிர சோதனை செய்யப்பட்டது.

Related Tags :
Next Story