அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு கோவில் காளை இறப்பு, கிராம மக்கள் இறுதிஅஞ்சலி


அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு கோவில் காளை இறப்பு, கிராம மக்கள் இறுதிஅஞ்சலி
x
தினத்தந்தி 15 Aug 2018 3:15 AM IST (Updated: 15 Aug 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் அருகே கிராம கோவில் ஜல்லிக்கட்டு காளை உடல் நலக்குறைவால் இறந்தது. அதற்கு கிராம மக்கள் ஒன்றுகூடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நொண்டிசாமி கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு கிராமத்தின் சார்பாக ஜல்லிக்கட்டுகாளை வளர்க்கப்பட்டு வந்தது.இந்த காளைக்கு வயது 18.

அலங்காநல்லூர், பாலமேடு, குலமங்களம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிகட்டில் பங்கேற்று தங்கம், வெள்ளி, காசுகளையும் மற்றும் பல்வேறு பரிசுகளையும் பெற்று வீரர்களுக்கு சவால் விட்டு பெயரையும், புகழையும் பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்து தந்தது.

இந்நிலையில் இந்த கோவில் காளை உடல்நிலை குறைவால் இறந்துவிட்டது. இதைதொடர்ந்து நொண்டிசாமி கோவில் காளைக்கு பிள்ளையார்நத்தம், சம்பகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் ஒன்றுகூடி வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவித்து சந்தனம் பூசி இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க ஒரு வாகனத்தில் இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. கிராமத்திற்கு பெருமை சேர்ந்த கோவில்காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Next Story