ரூ.24 லட்சம் மோசடி; இளம்பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு
திருமங்கலத்தில் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக இளம்பெண் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி செய்து வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் காமராஜர் 3–வது தெருவைச் சேர்ந்த மோகன் என்பவருடைய மகன் தினேஷ் (வயது28). ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்தார். அந்த கம்பெனியில் இதே ஊரைச் சேர்ந்த காளீஸ்வரி (24) வேலை பார்த்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரி தனியாக பிரிந்து சென்று புதிய கம்பெனியை தொடங்கினார். இவரிடம் வெளிநாட்டு வேலைகள் நிறைய வந்ததால் முடித்து கொடுக்க முடியவில்லை எனக்கூறி தினேசிடம் முடித்து கொடுக்க கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒப்புக்கொண்டாராம்.
இதற்காக தினேசிடம் ரூ.24 லட்சம் முன்பணம் கொடுத்தால் பணி முடிந்தவுடன் ரூ.84 லட்சம் பணம் தருவாக காளீஸ்வரி கேட்டாராம். இதை நம்பிய அவர் ரூ.24 லட்சம் பணத்தை காளீஸ்வரியிடம் கொடுத்தாராம்.
இந்நிலையில் பல மாதங்களாகி வேலையும் வரவில்லை, கொடுத்த பணமும் திரும்பி கிடைக்கவில்லையாம். இதுகுறித்து தினேஷ் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் காளீஸ்வரி அவரது உறவினர் வடிவேல், தந்தை, தாய் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.