கிருஷ்ணகிரி அணையில் ஷட்டர் பொருத்தும் பணிகள் நிறைவு 52 அடி தண்ணீர் தேக்க அதிகாரிகள் நடவடிக்கை
கிருஷ்ணகிரி அணையில் ஷட்டர் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் 52 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் உள்ள பிரதான மதகில் உள்ள முதல் ஷட்டர் கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதையடுத்து உடைந்த ஷட்டர் அகற்றப்பட்டு 12 அடி உயரத்தில் தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.3 கோடியில் புதிய ஷட்டர் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக தற்காலிக ஷட்டர் கியாஸ் வெல்டிங் மூலமாக அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இரும்பு தளவாட பொருட்கள் இணைக்கப்பட்டு புதிய ஷட்டர் பொருத்தும் பணி நடந்தது.
இந்த பணிகளை தொடர்ந்து, கருப்பு நிற வர்ணம் பூசும் பணி நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிதாக பொருத்தப்பட்ட ஷட்டர் உள்பட 8 ஷட்டர்களும் நேற்று சோதனை செய்யப்பட்டன. இதை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மெய்யழகன், கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் நடராஜன், உதவிபொறியாளர் சையத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து அணையில் தண்ணீர் 52 அடிக்கு தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். கிருஷ்ணகிரி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 52 அடியாகும். நேற்றைய நீர் இருப்பு 30.30 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 175 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story