சுதந்திர தினவிழாவையொட்டி பழனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


சுதந்திர தினவிழாவையொட்டி பழனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Aug 2018 10:15 PM GMT (Updated: 14 Aug 2018 8:56 PM GMT)

சுதந்திர தினவிழாவை யொட்டி பழனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பழனி,


சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய நகரங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பழனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி-கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் வனத்துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆலோசனையின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் திண்டுக்கல் சாலை, கொழுமம் சாலை, உடுமலை தேசிய நெடுஞ்சாலை, தாராபுரம் தேசிய நெடுஞ்சாலை, பழைய தாராபுரம் சாலைகளின் எல்லைகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. பழனியில் உள்ள தலைவர்களின் சிலை முன்பு தலா 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பழனி மலைக்கோவிலில் 1 இன்ஸ்பெக்டர், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20 போலீசார் பாதுகாப்பு பணியை செய்து வருகின்றனர். இதே போல் மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களை மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தொடர் ரோந்து பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவாலயங்கள், மசூதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீசார், குற்றப்பிரிவு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story