கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
சுதந்திர தின விழா இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
மேலும் தியாகிகளை கவுரவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்க உள்ளார். இந்த நிலையில் சுதந்திர தினவிழாவில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள 10 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அனுப்பி வருகிறார்கள்.இதே போல கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனை நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் சுமார் 900 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி அருகில் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story