சென்னை புறநகர் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டப்பட்டது.
செங்குன்றம்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
சென்னையை அடுத்த மாதவரம் மண்டல அலுவலகத்தில், மண்டல அதிகாரி விஜயகுமார் தேசிய கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கினார். மண்டல செயற்பொறியாளர் ராமமூர்த்தி, பொறியாளர்கள் தேவேந்திரன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாதவரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரமேஷ் தேசிய கொடியேற்றினார். இதில் துணை தாசில்தார் ஆறுமுகம், முதன்மை நிலஅளவையாளர் சவுமியா மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செங்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் செயலாளர் தன்ராஜ் தேசிய கொடி ஏற்றிவைத்தார்.
சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி
புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி மற்றும் ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த சுதந்திர தினவிழாவுக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் தலைவர் பி.சின்னமணி நாடார் தலைமை தாங்கினார். பள்ளியில் வசந்தமாரி சுரேந்திரனும், பாலிடெக்னிக் கல்லூரியில் மதுரை வெள்ளச்சாமி கலைக்கல்லூரி செயலாளர் பி.சுரேந்திரனும் தேசிய கொடியை ஏற்றிவைத்தனர்.
முன்னதாக காமராஜர் மற்றும் டாக்டர் சிவந்திஆதித்தனார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை வாழ்நாடார்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, துணைத்தலைவர்கள் கரு.சின்னதுரை, எல்.தாமஸ், பாலிடெக்னிக் நிர்வாக செயலாளர் கே.என்.எஸ்.கோவிந்தசாமி, கல்லூரி முதல்வர் மார்க்கரெட்ஜெர்சி, பள்ளி முதல்வர் குளோரிஷீலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் மாணவ–மாணவிகள் 60 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பின்னர் மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ரத்த தான முகாம்
சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையுடன் இணைந்து தாம்பரத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமை மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளரான தாம்பரம் யாக்கூப், தாம்பரம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் ரத்ததானம் செய்தனர். பின்னர் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமிலும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
தண்டையார்பேட்டை
இதேபோல் கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் பெண்கள், வாலிபர்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4–வது மண்டல அலுவலக வளாகத்தில் மண்டல அதிகாரி அனிதா தேசிய கொடி ஏற்றினார். இதில் மண்டல செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர்கள் தனசேகர், மாதவ சங்கர்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story