பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
குமரியில் விடிய விடிய பெய்த மழையால் பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டது. மேலும் ஒரே நாளில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மலைப்பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
மாவட்டத்தின் நீர் ஆதார முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகியவற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு,கிடுவென உயரத்தொடங்கி உள்ளது.
மாவட்டத்தில், நேற்று முன்தினம் பெய்த பெருமழை நள்ளிரவில் அதிகரித்ததால், பெருஞ்சாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைதொடர்ந்து, அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை அணையில் 29 ஆயிரத்து 910 கன அடி தண்ணீர் உபரியாக கால்வாயில் திறந்து விடப்பட்டது. இதனால், குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பிறகு பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி அணையில் இருந்து 12 ஆயிரத்து 67 கனஅடி நீர் உபரிநீர் கால்வாயில் திறந்துவிடப்பட்டது. அதேநேரத்தில் அணைக்கு 12 ஆயிரத்து 067 கன அடி தண்ணீர் வந்தது.
ஆனால் காலையில், பாசனத்துக்கு திறந்துவிடப்படும் கால்வாய்கள் வழியாக அணையில் இருந்து 30 ஆயிரத்து 360 கன அடி திறந்து விடப்பட்டது. மாலையில் பாசன கால்வாய் மூலமாக தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 73.15 அடியாக குறைந்தது.
அதேபோல் நேற்று மதியம் 7 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 190 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம் 24.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கனமழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 37 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 6030 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. சிற்றார்-1 அணைக்கு 2,985 கனஅடி தண்ணீர் உள்வரவாக வருகிறது. அணையில் இருந்து உபரியாக 2,614 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது.
சிற்றார்-2 அணைக்கு 542 கனஅடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 109 கனஅடி நீரும், மாம்பழத்துயைாறு அணைக்கு 178 கனஅடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது. இதில். மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-2, பொய்கை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. பொய்கை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 19 அடியாக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து நேற்று 23 அடியாக இருந்தது. அணைகளின் நீர்மட்டத்தை (அடிகளில்) பொறுத்தவரையில் சிற்றார் 1- 16.92, சிற்றார் 2- 16.99, பொய்கை-23, முக்கடல்-20 என்ற அளவில் இருந்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பேச்சிப்பாறை- 204(20 செ.மீ.), பெருஞ்சாணி- 128.6(13 செ.மீ.), சிற்றார் 1- 147.6(15 செ.மீ.), சிற்றார் 2- 122.2(12 செ.மீ.), மாம்பழத்துறையாறு- 60, புத்தன் அணை- 153.6(15 செ.மீ.), பூதப்பாண்டி- 75.4, களியல்- 40.6, கன்னிமார்- 103.6(10 செ.மீ.), கொட்டாரம்- 55, குழித்துறை- 88.2, மயிலாடி- 65.8, நாகர்கோவில்- 74.2, சுருளக்கோடு- 92.6, தக்கலை- 52.2, குளச்சல்- 52.4, இரணியல்- 54.2, பொய்கை- 40, முக்கடல்-100.2(10 செ.மீ.), முள்ளங்கினாவிளை-143(14 செ.மீ.), முட்டம்- 156(15 செ.மீ.), கோழிப்போர்விளை- 75 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.
மாவட்டத்தில் குறைபட்சமாக 40 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நேற்றும் காலையில் இருந்து இரவு வரையிலும் அணைப்பகுதிகளிலும், மாவட்டப்பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Related Tags :
Next Story