காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி சிலை கடத்தல் தடுப்பு போலீசார் திடீர் ஆய்வு
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மற்றும் உலோக பரிசோதனை பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 117 கிலோ எடை கொண்ட சோமாஸ்கந்தர் சிலை இருந்தது. இந்த சிலை சேதம் அடைந்ததை தொடர்ந்து, புதிதாக சிலை செய்யப்பட்டது, புதிதாக செய்யப்பட்ட சிலையில் தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடைபெற்றதாக காஞ்சீபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக கோர்ட்டு உத்தரவுபடி 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றன. புதிதாக செய்யப்பட்ட சிலையிலும், பழைய சிலையிலும் தங்கம் இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஆய்வு
இதனை தொடர்ந்து இந்த சிலை மோசடி விவகாரம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மற்றும் உலோக பரிசோதனை பிரிவினர் நேற்று 3–வது முறையாக ஆய்வு மேற்கொண்டனர். ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை. இதில் எந்த அளவுக்கு தங்கம் உள்ளது. எந்த வகையான உலோகத்தில் இந்த சிலைகள் செய்யப்பட்டுள்ளது. ஏதாவது போலி சிலைகள் உள்ளதா என்பது தொடர்பாக இவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
Related Tags :
Next Story