மதுரை சிறையில் முகிலன் உண்ணாவிரதம்
10 அம்ச கோரிக்கைகைளை வலியுறுத்தி சுதந்திரதினமான நேற்று மதுரை சிறையில் முகிலன் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை,
நெல்லை கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் முகிலன். இவர், நேற்று ஜெயிலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை– போடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சிலை கடத்தல் வழக்குகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும். 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகைளை வலியுறுத்தி சுதந்திரதினமாக நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டார். அதன் படி காலையில் இருந்து மாலை 5.30 மணி வரை சிறையின் உள்ளேயே முகிலன் உண்ணாவிரதம் இருந்தார். அதன்பின்னர் அவர் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.
Related Tags :
Next Story