கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா 84 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
கிருஷ்ணகிரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் கதிரவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து 84 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 72-வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல் துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் புறாக்களையும், பலூன்களையும் பறக்க விட்டார்.
இதைத் தொடர்ந்து 32 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். இதன் பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.46 லட்சத்து 98 ஆயிரத்து 161 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
தொடர்ந்து அரசு பணிகளை சிறப்பாக செய்த முன்னாள் படை வீரர்கள், நலத்துறை, வருவாய் துறை, மாவட்ட பிற்பட்டோர் நலன், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, மாவட்ட சமூக நலம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ( மகளிர் திட்டம்) என பல்வேறு துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, வேளாங்கண்ணி, பாரத், கேம்பிரிட்ஜ், டி.கே.சாமி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர்களுக்கு கலெக்டர் கதிரவன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி, திட்ட இயக்குநர் நரசிம்மன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர் சரவணன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கண்ணன், தங்கவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானம் மற்றும் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story