திருச்சி கொள்ளிடம் பழைய பால தூணில் திடீர் விரிசலால் பரபரப்பு போக்குவரத்து நிறுத்தம்
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இருபுறமும் கரையை தொட்டபடி செல்கிறது. இந்தநிலையில் பழைய பாலத்தில் தூணில் ஏற்பட்டுள்ள திடீர் விரிசலால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.
ஸ்ரீரங்கம்,
காவிரியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. திருச்சி திருவானைக்காவல் சோதனைச்சாவடியில் இருந்து நெ.1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றில் பழமையான பாலம் உள்ளது.
இதன் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. புதிய பாலத்தில் தான் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. பழைய பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்வது வழக்கம். ஒரு சில நேரங்களில் உள்ளூர் பிரமுகர்கள் கார்களில் செல்வது உண்டு.
கொள்ளிடம் பழைய பாலத்தில் மொத்தம் 23 தூண்கள் உள்ளன. இந்தநிலையில் சோதனைச்சாவடி பக்கத்தில் இருந்து 6-வது தூணில் நேற்று மாலை திடீரென விரிசல் ஏற்பட்டது. தூணில் சிமெண்டு பூச்சு குறிப்பிட்ட உயரத்திற்கு வரை பெயர்ந்து இருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார் விரைந்து வந்தனர். பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினர். பொதுமக்கள் யாரும் பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
புதிய பாலம் வழியாகவே அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. திருவானைக்காவல் பகுதியில் இருந்து நெ.1 டோல்கேட், உத்தமர்சீலி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார வினியோகம் இருந்து வருகிறது. பாலத்தின் தூணில் ஏற்பட்ட விரிசல் ஆபத்தாக கூடும் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டது. மாற்று ஏற்பாடாக சமயபுரம் பகுதியில் இருந்து நெ.1 டோல்கேட்டிற்கு மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பழைய பாலம் என்பதாலும், நீரோட்டத்தின் காரணமாகவும் தூணில் உறுதித்தன்மை இழந்து விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என கருதினர். தூண் இடிந்து விழுந்தால் பாலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலத்தின் தூணில் ஏற்பட்ட விரிசலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் உபரி தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்பதால் விரிசல் ஏற்பட்ட தூண் சரிந்து விழ வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாலம் கடந்த 1924-ம் ஆண்டு கட்டப்பட்டது என அதிகாரிகள் கூறினர்.

Related Tags :
Next Story