கேரளாவில் பலத்த மழை எதிரொலி; திருச்சி–கொச்சி இடையே விமான சேவை ரத்து


கேரளாவில் பலத்த மழை எதிரொலி; திருச்சி–கொச்சி இடையே விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 16 Aug 2018 4:00 AM IST (Updated: 16 Aug 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக கொச்சி விமானநிலையம் வருகிற 18–ந் தேதி (சனிக்கிழமை) வரை மூடப்படுகிறது. இதனால் திருச்சி–கொச்சி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

செம்பட்டு,

கேரளமாநிலம் கொச்சியில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கொச்சிக்கும் தனியார் விமானநிறுவனம் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. வழக்கமாக இந்த விமானம் கொச்சியில் இருந்து திருச்சிக்கு காலை 7.30 மணிக்கு வந்து, பின்னர் பெங்களூரு புறப்பட்டு செல்லும். அதன்பிறகு இந்த விமானம் பெங்களூருவில் இருந்து மீண்டும் திருச்சி வந்து காலை 10.15 மணிக்கு திருச்சியில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு செல்லும். இந்தநிலையில் கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக கொச்சி விமானநிலையம் வருகிற 18–ந் தேதி (சனிக்கிழமை) வரை மூடப்படுகிறது. இதனால் திருச்சி–கொச்சி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story