தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2018 4:26 AM IST (Updated: 16 Aug 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

திருச்செந்தூர், 


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசிய கொடியேற்றினார். கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சுதந்திர தின விழா நடந்தது. ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி தேசிய கொடியேற்றினார். பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவன செயலாளர் சுப்பிரமணியம் பரிசுகளை வழங்கினார்.

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முதல்வர் கலைக்குரு செல்வி தேசிய கொடியேற்றினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் நீதிமன்ற வளாகத்தில் சப்-கோர்ட்டு நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் தேசிய கொடியேற்றினார். மாஜிஸ்திரேட்டு தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் கோவிந்தராசு தேசிய கொடியேற்றினார். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் கோமதி சங்கர் தேசிய கொடியேற்றினார். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டர் பொன் ரவி தேசிய கொடியேற்றினார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் சிறப்பாக படித்து வரும் 34 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரமும், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகள் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 8 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் காசோலை வழங்கப்பட்டது. விழாவில் மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கோர்ட்டு வளாகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிபதி பி.எஸ்.கவுதமன், சார்பு நீதிபதி டி.செல்வம், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆர்.சாமுவேல் பெஞ்சமின், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி அசன்முகமது, முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை, 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பிஸ்மிதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அரிகரன் மற்றும் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story