பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:00 AM IST (Updated: 17 Aug 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் முருகையன், நாகை நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை ஒன்றிய செயலாளர் பகு, கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ஜெயராம், கீழையூர் ஒன்றிய செயலாளர் முருகையன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் வேணு, திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜெயபால், வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, மாதர்சங்க மாவட்ட செயலாளர் லதா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

நாகை மாவட்ட நீதிமன்ற வளாக நுழைவு வாயிலில் இருந்து தம்பித்துறை பூங்கா வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளை கோர்த்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாதர்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். 

Next Story