நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு வலியுறுத்தி தஞ்சையில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு வலியுறுத்தி தஞ்சையில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:30 AM IST (Updated: 17 Aug 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு வலியுறுத்தி தஞ்சையில் தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை, பட்டுக்கோட்டை , கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன துணைத்தலைவர் ராஜகிரி தங்கராசு தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மண்டல தலைவர் ஜெயராமன், மண்டல செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக பேச்சாளர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 8 சதவீத உயர்ஜாதி நீதிபதிகள் 92 சதவீத மக்களுக்கு இறுதி தீர்ப்பு வழங்குவதா? சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் நீதிபதி பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். நீதித்துறையிலும் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சித்தார்த்தன், கவுதமன், மாவட்ட செயலாளர்கள் வீரையன், துரைராசு, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் அழகிரிசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், வீதி நாடகக் குழு அமைப்பாளர் பெரியார் நேசன், மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி நன்றி கூறினார். 

Next Story