வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
குமரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமசந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த பகுதிகளில் ஆய்வு செய்யவும், அவசர கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமசந்திரன் நேற்று வந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெரிசனங்கோப்பு, ஞாலம் பகுதிகளையும், பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சானி அணைகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதோடு கீரிப்பாறையில் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டார்.
மேலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்தார். அங்கு மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள உணவு, குடிநீர் மற்றும் சுகாதார நிலை பற்றி ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் பிரசாந்த் வடநேரே உடனிருந்தார்.
அதன் பிறகு மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கனமழை தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமசந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் பற்றியும், எனவே அங்கு மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. அதோடு குளங்கள், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு பணிகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story