தண்டவாளத்தில் போட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள், ரெயிலில் சிக்கி நடைமேடை சேதம்
கடக்க முயன்ற போது ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் போட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள், ரெயிலில் சிக்கி நடைமேடை சேதம், மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெலகாவி,
பெலகாவி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் வந்ததால் மோட்டார் சைக்கிளை வாலிபர் தண்டவாளத்தில் போட்டு சென்றார். அந்த மோட்டார் சைக்கிள், ரெயிலில் சிக்கி நடைமேடை சேதமடைந்தது. இதில் தொடர்புடைய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மீரஜில் இருந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளி நோக்கி நேற்று காலையில் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் காலை 9 மணியளவில் பெலகாவி மாவட்டம் ராயபாக் ரெயில் நிலையத்தை நோக்கி வந்தது. அப்போது, ரெயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தை மோட்டார் சைக்கிளில் ஒருவர் கடக்க முயன்றார்.
மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தில் சென்றபோது ரெயில் வருவதை பார்த்த அந்தநபர் உடனடியாக மோட்டார் சைக்கிளை தண்டவாளத்திலேயே போட்டுவிட்டு இறங்கி ஓடினார்.
இதனால் தண்டவாளத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் மீது ரெயில் மோதியது. என்ஜினில் சிக்கிய மோட்டார் சைக்கிள் நொறுங்கியதோடு, சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு இழுத்து சென்று நின்றது. மேலும், ரெயிலில் சிக்கிய மோட்டார் சைக்கிளால் ரெயில் நிலைய நடைமேடை சேதமானது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெயிலில் சிக்கி உருக்குலைந்த மோட்டார் சைக்கிளை வெளியே எடுத்தனர். பின்னர், ரெயில் என்ஜினில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. கோளாறுகள் எதுவும் இல்லாததை தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக அங்கிருந்து உப்பள்ளி நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது.
இந்த காலதாமதத்தால் பயணிகள் சிரமம் அடைந்தனர். இருப்பினும், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யார்? என்பது இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள். மேலும் அந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று ராயபாக் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story