நங்கவரம், பெரியபனையூர் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை


நங்கவரம், பெரியபனையூர் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 18 Aug 2018 3:45 AM IST (Updated: 18 Aug 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் வெள்ளப்பெருக்கு, நங்கவரம், பெரியபனையூர் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நச்சலூர்,

நங்கவரம், பெரியபனையூர் ஆகிய பகுதிகளில் உள்ள பனையூர்காட்டுவாரி, வடிகால் வாய்க்கால், நங்கம் காட்டுவாரி ஆகியவற்றிற்கு இனுங்கூர் கட்டளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது கட்டளை வாய்க்காலில் அதிக அளவில் தண்ணீர் செல்கிற நிலையில் மேற்கண்ட வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடப்படாமல் உள்ளது. நங்கவரம், பெரியபனையூர் ஆகிய பகுதிகளில் மேற்கண்ட வாய்க்கால்களை நம்பி பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது தண்ணீர் இல்லாமல் அந்த நிலங்கள் விவசாயம் செய்யாமல் தரிசாக கிடக்கிறது. பனையூர் காட்டு வாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டது. இதுவரை தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இந்த வாரி பாசனத்தை நம்பி பல விவசாய குடும்பங்கள் இருக்கின்றன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் பெருகமணி காவிரி ஆற்றில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நங்கவரம், பெரியபனையூர் பகுதியில் உள்ள வாய்க்கால் களில் தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றது. மேலும் ஆடி மாதத்தில் நெல் பயிருக்கு நாற்று விடும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் காவிரி ஆற்றில் வெள்ளம் அடித்து கொண்டு வீணாக கடலுக்கு தண்ணீர் செல்கிறது. நங்கவரம் பகுதி வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக் கின்றனர்.

Next Story