தர்மபுரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 11:01 PM GMT (Updated: 17 Aug 2018 11:01 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாப்பட்டது.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் வி.முருகேசன் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து பேசினார். செயலாளர் எம்.பிருஆனந் பிரகாஷ் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி மாணவ-மாணவிகள் தேசத்தலைவர்கள் வேடமணிந்து மற்றும் சாரணர் படை, பசுமைப்படை மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளர் எவரெஸ்ட் முனிரத்தினம் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. இல.வேலுசாமி கலந்து கொண்டு சுதந்திர தினம் குறித்து பேசினார். விழாவில் மத்திய, மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருது வாங்கிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மெட்ரிக் பள்ளி முதல்வர் சந்தானமோகன், சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் மலர்விழி தேசிய கொடி ஏற்றினார். இந்த விழாவில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியை சேர்ந்த 100 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு கலெக்டர் மலர்விழி பாராட்டி, சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். இதனை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Next Story