குரும்பூர் அருகே உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு
குரும்பூர் அருகே உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்திருப்பேரை,
குரும்பூர் அருகே உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–
கள்ளக்காதல் ஜோடிதூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள குரங்கணியைச் சேர்ந்தவர் மனோகர். இவருடைய மனைவி சத்தியகலா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனோகர் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சத்தியகலா தன்னுடைய குழந்தைகளுடன் குரங்கணிக்கு வந்தார். சத்தியகலா, ஏரலில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சத்தியகலாவுக்கும், அவருடைய உறவினரான சென்னையைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் செல்வகணேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
அரிவாள் வெட்டுகடந்த 13–ந் தேதி சத்தியகலா தன்னுடைய பெற்றோரின் ஊரான ஆத்தூர் அருகே உள்ள மஞ்சள்நீர்காயலில் நடந்த கோவில் கொடை விழாவுக்கு குழந்தைகளுடன் சென்றார். அங்கு செல்வகணேசும் வந்தார். பின்னர் நேற்று முன்தினம் சத்தியகலா, செல்வகணேசுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் பஸ்சில் குரும்பூர் அருகே அம்மன்புரத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து பக்கத்து ஊரான குரங்கண்தட்டுக்கு நடந்து சென்றனர்.
அங்குள்ள வாழைத்தோட்டத்தில் உல்லாசமாக இருக்க செல்வகணேஷ் அழைத்தார். ஆனால் சத்தியகலா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகணேஷ் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சத்தியகலாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சத்தியகலாவை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செல்வகணேசை வலைவீசி தேடி வருகின்றனர்.