சேலம் பெரமனூரில் பந்தல் பொருட்கள் குடோனில் தீ விபத்து
சேலம் பெரமனூரில் பந்தல் பொருட்கள் இருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
சேலம்,
சேலம் பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செரிப் (வயது 58). இவர், கோவில் திருவிழா, கட்சி மாநாடு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். பந்தல் அமைக்க தேவையான மூங்கில், சவுக்கு மரம், தென்னங்கீற்று, கயிறு மற்றும் கட்சி கொடிகளை அருகில் உள்ள குடோனில் வைத்திருந்தார்.
இந்தநிலையில், நேற்று அதிகாலையில், அவரது பந்தல் பொருட்கள் இருந்த குடோன் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த செரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தீ விபத்து பற்றி செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குடோன் மேல்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஷெட் முழுவதும் எரிந்து கீழே விழுந்தது.
இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சவுக்கு மரம், மூங்கில்கள், தென்னங்கீற்று மற்றும் கயிறு ஆகியவை எரிந்து சாம்பலானது. சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியிருக்கும் என கூறப்படுகிறது. பந்தல் பொருட்கள் குடோனில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story