தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகளிர் குழு கூட்டமைப்பினர் தர்ணா


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகளிர் குழு கூட்டமைப்பினர் தர்ணா
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அறைக்கு செல்லும் நுழைவு வாயில் முன்பு நீலகிரி ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அறைக்கு செல்லும் நுழைவு வாயில் முன்பு நீலகிரி ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் நிர்மலாதேவி தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் சந்திரா, பொருளாளர் ஸ்டெல்லாமேரி உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து மகளிர் குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறையை பராமரிக்க எங்கள் கூட்டமைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தோம். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் திடீரென எங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்துவிட்டு மானோஜிப்பட்டி தெற்கு பூக்கொல்லையை சேர்ந்த ஒரு கூட்டமைப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கழிவறையின் பூட்டை சிலர் உடைத்துவிட்டனர். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Next Story