கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட தூண் இடிந்து விழுந்தது மேலும் ஒரு தூண் சரிந்ததால் பரபரப்பு
முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் திருச்சி கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் 18-வது தூணில் கடந்த 15-ந்தேதி மாலை சிறிய விரிசல் ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம்,
முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் திருச்சி கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் 18-வது தூணில் கடந்த 15-ந்தேதி மாலை சிறிய விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் தொடர்ந்து பெரிதாகி கொண்டே வந்தது. அந்த தூண் முழுவதும் சரிந்து தண்ணீரில் மூழ்கி பாலம் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.25 மணி அளவில் பாலம் இடிந்து விழுந்தது. அதில் இருந்த இரும்பு கம்பிகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
இதற்கிடையில் நேற்று இரவு 18-வது தூணின் அருகே 20-வது தூண் கொஞ்சம், கொஞ்சமாக சரிய தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த தூணின் மேல் பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டு இரண்டாக பிளந்தது. இதனால் அந்த தூண் உள்ள இடத்திலும் பாலம் எந்த நேரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரிசல் ஏற்பட்ட தூண் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story