அனுமந்தபுரத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி


அனுமந்தபுரத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 19 Aug 2018 4:00 AM IST (Updated: 19 Aug 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

குரங்கு அங்குள்ள மின்கம்பியில் ஏறி விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் அந்த குரங்கு உடல் கருகி பரிதாபமாக செத்தது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ளது அனுமந்தபுரம். இந்த கிராமத்தில் நேற்று காலை ஒரு குரங்கு அங்கும், இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதையொட்டி குரங்கு அங்குள்ள மின்கம்பியில் ஏறி விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் அந்த குரங்கு உடல் கருகி பரிதாபமாக செத்தது. அதன் உடல் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மின்கம்பியில் இறந்து தொங்கி கொண்டிருந்த அந்த குரங்கின் உடலை மீட்டு கீழே கொண்டு வந்தனர். அதன் பின்னர் அனுமந்தபுரம் பஸ் நிறுத்தம் அருகில் குரங்கின் உடலை வைத்து அதற்கு மாலை அணிவித்தும், பொட்டு வைத்தும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து குரங்கின் உடலை அப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். 

Next Story