ராசிபுரம் பகுதியில் பள்ளிகளில் சுதந்திர தினவிழா


ராசிபுரம் பகுதியில் பள்ளிகளில் சுதந்திர தினவிழா
x
தினத்தந்தி 18 Aug 2018 10:07 PM GMT (Updated: 18 Aug 2018 10:07 PM GMT)

ராசிபுரம் பகுதியில் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

ராசிபுரம்,

ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.) சுதந்திர தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைவர் டாக்டர் தங்கவேல் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பள்ளியின் செயலாளர் மனோகரன், பொருளாளர் வஜ்ரவேலு, நிர்வாக அறங்காவலர் துரைசாமி, அறக்கட்டளை பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சுதந்திர தினத்தின் சிறப்புகள் குறித்து பேசினார்கள். மாணவ, மாணவிகள் தேசத்தலைவர்கள் வேடம் அணிந்து வந்து கலைநிகழ்ச்சி நடத்தினார்கள். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

அதேபோல் எஸ்.ஆர்.வி. பெண்கள் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளியின் தலைவர் கொடியேற்றி வைத்து பேசினார். பள்ளியின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாணவிகள் சுதந்திர தினத்தை பற்றி பேசினார்கள். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா நன்றி கூறினார்.

ராசிபுரம் அருகேயுள்ள வையப்பமலை விநாயகா இன்டர்நேஷனல் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பத்மநாபன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விஜயன் கலந்து கொண்டு, தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டிய நிகழ்ச்சி, தற்காப்பு கலை நிகழ்ச்சியான கராத்தே மற்றும் நாடகம், மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொற்பொழிவு நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கினார். விழாவில் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story