மல்லசமுத்திரம், திருச்செங்கோடு பள்ளிகளில் சுதந்திர தினவிழா
மல்லசமுத்திரம், திருச்செங்கோடு பகுதியில் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
மல்லசமுத்திரம்,
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி மஹேந்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் ஆனந்த் தலைமை தாங்கினார். மஹேந்ரா பள்ளிகளின் முதன்மை முதல்வர் சம்பத் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் மாணவர் முகுந்தன், மாணவி சவுமியா ஆகியோர் விடுதலை போராட்டம், தேசப்பற்று குறித்து பேசினர். மாணவர் கணேஷ்குமார் கவிதை வாசித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர்.
மல்லசமுத்திரம் ஏ.கே.வி. பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சி.பி.எஸ்.இ. பள்ளியின் தலைவர் ஆறுமுகமும், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொருளாளர் பழனிசாமியும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து பேச்சு போட்டி, கவிதைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவ-மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள்போல் வேடம் அணிந்து உரையாற்றினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி ஆசிரியை சத்யா மற்றும் கீதாஞ்சலி வரவேற்று பேசினார்கள். முடிவில் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
திருச்செங்கோடு சின்னதம்பிபாளையம் நாளந்தாஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் மழலையர் தொடக்க பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முன்னாள் படைவீரரும், இயக்குனருமான கர்ணன் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பள்ளி இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கோபிநாத் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் தேவராஜன் தலைமை உரை ஆற்றினார். இதில் தலைவர் வெங்கடேசன், நாளந்தாஸ் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி ஆகியோர் சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் மாணவ-மாணவிகளின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பேச்சு, கட்டுரை, பாட்டு, ஓவியம், மாறுவேடம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் வாழ்க்கை வரலாறு குறித்த கட்டுரை போட்டியில் பிளஸ்-2 மாணவர் நிசாந்த் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அந்த மாணவரை பாராட்டி பள்ளி இயக்குனர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். முடிவில் ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story