பூந்தமல்லி அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
பூந்தமல்லி அருகே, ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடுபாபு தலைமையில் போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோவும், அதனை பின்தொடர்ந்து 2 மோட்டார்சைக்கிள்களும் வேகமாக வந்தது.
அந்த வாகனங்களை மடக்கி, அதில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் கஞ்சாவை கடத்திச்செல்வது தெரிந்தது.
இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், சென்னை வடபழனியை சேர்ந்த ஜோசப் (வயது 28), சுரேஷ் (22), பூந்தமல்லி சென்னீர்குப்பத்தை சேர்ந்த சிலம்பரசன் (28) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கடத்தி வந்து, இரவு நேரங்களில் ஆட்டோ மற்றும் மோட்டார்சைக்கிள்களில் எடுத்துச்சென்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வினியோகம் செய்தது தெரிந்தது.
வழக்கம்போல் புறநகர் பகுதிகளில் வினியோகம் செய்வதற்காக கஞ்சாவை ஆட்டோவில் கொண்டு சென்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களுக்கு அனந்தராமன் என்பவர்தான் கஞ்சா வினியோகம் செய்து உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story