மாயனூர் கதவணை கரையில் மண் அரிப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது
மாயனூர் கதவணை கரையில் ஏற்பட்ட மண் அரிப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
மேட்டூர், பவானிசாகர், அமராவதி ஆகிய அணைகளில் இருந்து அதிகளவு உபரிநீர் தொடர்ச்சியாக திறந்து விடப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கதவணைக்கு நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 2¼ லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் வந்தது. இதில் கதவணையில் மொத்தம் உள்ள 98 ஷட்டர்களில் 83 ஷட்டர்கள் திறக்கப்பட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கதவணை பகுதியில் பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வந்த வெள்ளப்பெருக்கால் மாயனூர் கதவணையில் சீலைபிள்ளையார்புதூர் பகுதியில் கரையில் இரு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது பொதுப்பணித்துறை அலுவலக கட்டிட பகுதியின் அருகே கருங்கற்களை கொண்டு கரையை பலப்படுத்தியிருந்த பகுதியில் அரிப்பு ஏற்பட்டு கற்கள் பெயர்ந்து விழ தொடங்கியதும், ஆற்று நீர் வெளியேறிச்செல்லும் பகுதியிலும் கரையில் அரிப்பு ஏற்பட்டது தெரிந்தது. இதையடுத்து பணியாளர்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள், லாரிகள் ஆகியவற்றை கொண்டு போர்க்கால நடவடிக்கை எடுத்து மண் அரிப்பு ஏற்பட்ட இடங்களை சரிசெய்து கரையை பலப்படுத்தினர். இந்த பணிகளை நேற்று முசிறி தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து அந்த பகுதியை பொதுப்பணித்துறையின் கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story