பாந்திரா கடற்கரையில் கடல் பன்றி, டால்பின் செத்து கரை ஒதுங்கின
பாந்திரா கடற்கரையில் கடல் பன்றி, டால்பின் செத்து கரை ஒதுங்கின.
மும்பை,
பாந்திரா கடற்கரையில் கடல் பன்றி, டால்பின் செத்து கரை ஒதுங்கின.
கடலில் கழிவு
மும்பை கடற்கரைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் செத்து கரை ஒதுங்கி வருகின்றன. இதற்கு கடலில் கலக்கும் கழிவுகள் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அண்மையில் மும்பையில் கடல் சீற்றத்தின் போது பல டன் கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை அலைகள் வாரி சுருட்டி வெளியே தள்ளியிருந்ததை உதாரணமாக கொள்ள முடியும்.
இந்த நிலையில், மும்பை யில் 2 கடல் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கின.
டால்பின், கடல் பன்றி
பாந்திரா பாண்ட் ஸ்டாண்டு கடற்கரையில் ஒரு டால்பின் மற்றும் போர்போய்ஸ் எனப்படும் கடல் பன்றி செத்து கரை ஒதுங்கி கிடந்தன. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு வந்து அவற்றின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 2 உயிரினங்களுடன் சேர்த்து மும்பையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் மொத்தம் 12 கடல்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி உள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் மொத்தம் 93 கடல்வாழ் உயிரினங்கள் இறந்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story