தூத்துக்குடியில் இருந்து மேலும் 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் புறப்பட்டன


தூத்துக்குடியில் இருந்து மேலும் 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் புறப்பட்டன
x
தினத்தந்தி 20 Aug 2018 3:00 AM IST (Updated: 20 Aug 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து மேலும் 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் புறப்பட்டன.

தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆயுதப்படை அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், கோவில்பட்டி, திருச்செந்தூர் தாலுகா அலுவலகங்களில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதில் குடிநீர், அரிசி, பருப்பு, ஆக்சிஜன் சிலிண்டர்கள், பிஸ்கட் வகைகள், மருந்து, மாத்திரைகள், எண்ணெய், மாவு வகைகள், புத்தாடைகள், போர்வைகள், பாய், செருப்பு, கொசுவிரட்டி உள்ளிட்ட 46 வகையான பொருட்கள் கடந்த 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சேகரிக்கப்பட்டன.

இந்த பொருட்கள் கடந்த 2 நாட்களாக அனுப்பப்பட்டு வந்தது. ஏற்கனவே 6 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு இருந்தன. நேற்று மேலும் 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் பத்தினம் திட்டா, ஆலப்புழா, அடூர், செங்கனூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த லாரிகளை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story