நந்தூர்பரில் கன மழைக்கு 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி ஆடு, மாடுகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன
நந்தூர்பர் மாவட்டத்தில் கன மழைக்கு 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர். ஆடு, மாடுகளும் தண்ணீரில் அடித்து செல்லப் பட்டன.
நாசிக்,
நந்தூர்பர் மாவட்டத்தில் கன மழைக்கு 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர். ஆடு, மாடுகளும் தண்ணீரில் அடித்து செல்லப் பட்டன.
கொட்டித்தீர்த்த மழை
நந்தூர்பர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அப்பகுதியில் ஓடும் சர்பானி மற்றும் ரங்காவாலி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ள்ளது.
குறிப்பாக நந்தூர்பர் மாவட்டத்தில் உள்ள நவப்பூர் தாலுகாவில் மட்டும் 4 மணி நேரத்தில் 40.9 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அந்த தாலு காவில் உள்ள பங்கர்வாடி பகுதியை சேர்ந்த சய்தா உசேன், ஜமுனாபாய் லசா ஆகிய பெண்கள் வெள்ளத் தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
இதேபோல் கோக்சா கிராம த்தை சேர்ந்த வன்டிபாய் போட்லயா என்ற பெண் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து, அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.
ஆடு, மாடுகளும்...
நவப்பூர் தாலுகா, காகேல்பாடாவில் உள்ள சிறிய பாலத்தை கடந்து செல்ல முயன்றபோது, கரைபுரண்டு ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காசிராம் பாப்ஜி என்பவர் உயிரிழந்தார். இதேபோல் மழை, வெள்ளத்துக்கு அதே பகுதியை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரை பற்றிய தகவல்கள் தெரியவரவில்லை.
மேலும் இந்த தாலுகாவில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 17 மாடுகள், 26 ஆடுகள் ஆகியவையும் இறந்துள்ளன.
மோட்டார் சைக்கிள், கார்கள் மற்றும் லாரிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது.
Related Tags :
Next Story