பெரம்பலூர் 5-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை வசதி செய்து தர வேண்டும் கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் 5-வது வார்டுக்குட்பட்ட ராஷினி நகர் பகுதியில் பாதாள சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என்று, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். அப்போது பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட வடக்கு மாதவி ரோட்டிற்கு மேல்புறம் உள்ள மேட்டு தெரு ராஷினி நகரில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு அளித்தனர்.
அதில், ராஷினி நகரில், பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு அதற்கான இணைப்பு கட்டணத்தை பொதுமக்களிடம் வசூலித்தனர். ஆனால் இதுவரை எங்கள் பகுதிக்கு நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் எங்கள் நகரில் இருந்து கழிவுநீர் வெளியே செல்லமுடியாமல் ஆங்காங்கே குளம் போல் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில், எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை வசதியை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
வேப்பந்தட்டை தாலுகா தொண்டப்பாடி கிராமத்தில் வடக்கு தெருவில் வசிக்கும் மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய்கள் இல்லை. இதனால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் தெருவில் தேங்குகின்றன. தெருவில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைப்பாதை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் தெருவில் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய்களும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதையும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் கொடுத்த மனுவில், கொட்டரை கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூரை சேர்ந்த பழனிமுத்து கொடுத்த மனுவில், பெரம்பலூரில் இருந்து அயன்பேரையூருக்கு காலை 6 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஒரு அரசு பஸ் வந்து செல்கிறது. மற்ற நேரங்களில் அந்த பஸ் அயன்பேரையூர் கிராமத்திற்கு வராமல் வி.களத்தூர் செல்கிறது. எனவே அந்த அரசு பஸ்சை மற்ற நேரங்களிலும் அயன்பேரையூர் கிராமத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேப்பந்தட்டைக்கு, அயன்பேரையூரில் இருந்து காலை, மதியம், மாலை ஆகிய 3 வேலை நேரங்களிலும் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், பேரையூர் ஏரி கரையை கிராவல் மண் போட்டு பலப்படுத்தி தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
குன்னம் தாலுகா பெரிய வெண்மணி வடக்கு தெருவை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுவில், ஒதியம்-பேரளி இடையே வனப்பகுதி உள்ளது. அங்கு நிறைய மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளை பாதுகாக்க வனப்பகுதியை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது. மேலும் அந்தப்பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story