மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.10½ லட்சம் மோசடி
மெட்ரொ ரெயில் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10½ லட்சம் மோசடி செய்ததாக பஸ் கண்டக்டர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
அரக்கோணத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலைக்கு சேர முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது என்னை சந்தித்த சிலர், பணம் கொடுத்தால் மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாங்கலாம் என்றும், அதற்கு ரூ.25 லட்சம் செலவாகும் என்றும் கூறினார்கள். அதை நம்பி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சிலரை சந்தித்து பேசினேன்.
அவர்கள் மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் மேலாளர் வேலை காலியாக இருப்பதாகவும், அதற்கு ரூ.25 லட்சம் கொடுத்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்றனர். முன்பணமாக ரூ.10½ லட்சம் கேட்டனர். நானும் அதை உண்மை என்று நம்பி ரூ.10½ லட்சம் பணம் கொடுத்தேன். மீதிதொகையை வேலை கிடைத்த பிறகு தருவதாக கூறினேன்.
ஆனால், எனக்கு மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாங்கித்தரவில்லை. நான் கொடுத்த ரூ.10½ லட்சத்தையும் திருப்பித்தரவில்லை. இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு 2015-ம் ஆண்டு கொடுக்கப்பட்டு, உடனடியாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கில் சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக வேலை செய்யும் அர்ச்சுனன் (வயது 45), டிரைவராக வேலை செய்யும் மதுரைவீரன் (48) ஆகிய இருவரையும் தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புள்ள மேலும் 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story