தனஅபிவிருத்தி கூட்டுறவு கடன் சங்கம் திறப்பு விழா வருகிற 23-ந் தேதி நடக்கிறது


தனஅபிவிருத்தி கூட்டுறவு கடன் சங்கம் திறப்பு விழா வருகிற 23-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 20 Aug 2018 10:15 PM GMT (Updated: 20 Aug 2018 9:10 PM GMT)

பெங்களூரு ராஜாஜி நகரில் வருகிற 23-ந் தேதி தனஅபிவிருத்தி கூட்டுறவு கடன் சங்கம் திறக்கப்பட உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு ராஜாஜி நகர் சிவாநகர் மெயின்ரோடு 5-வது பேஸ், 1-வது ஸ்டேஜில் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் புதிதாக தனஅபிவிருத்தி கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட உள்ளது. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தை பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், ராஜாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வருகிற 23-ந் தேதி திறந்து வைக்கிறார்கள்.

இந்த நிலையில், சங்கத்துக்கான கணக்கு புத்தகம் மற்றும் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி அச்சங்கத்தின் தலைவர் சுந்தர்வேல் சுப்பிரமணி மற்றும் இயக்குனர் லட்சுமண் ஆகியோர் நேற்று கூறியதாவது:-

பாடுபடும் ஏழை மக்கள் மற்றும் தமிழர்களுக்கு உதவி செய்து அவர்களை வாழ்வில் உயர்த்தும் நோக்கத்தில் தனஅபிவிருத்தி கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட உள்ளது. வீட்டு மனை வாங்க கடன், வீடு கட்டுவதற்கான கடன், வாகன கடன், நகைக்கடன், தனிநபர் உறுதி கடன் ரூ.25 ஆயிரம், சிறப்பு தனிநபர் கடன் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story