பொய்சரில் வாலிபரை கொன்ற மாமனார், மைத்துனர் கைது
பொய்சரில் வாலிபரை கொலை செய்த மாமனார், மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை காந்திவிலி கிழக்கு பொய்சர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர் சாந்தாகுருஸ் பகுதியில் வசித்து வந்த ஷியாம் (வயது 34) என்பதும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. ஷியாமை முன் விரோதம் காரணமாக அவரது மாமனார் சஜன் (52) மற்றும் மைத்துனர்கள் அடித்து கொலை செய்து உள்ளனர்.
இதையடுத்து போலீசார் சஜனையும், அவரது ஒரு மகனையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
சஜனின் மகளை ஷியாம் காதலித்து திருமணம் செய்து உள்ளார். இதில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஷியாமின் மனைவி தீயில் கருகி பலியானார். ஷியாம் தான் தனது மகளின் இறப்பிற்கு காரணம் என சஜன் நினைத்தார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி ஷியாம், மாமனார் வீட்டில் வசித்து வரும் தனது 6 வயது மகளை பார்க்க சென்றார். அப்போது ஷியாமிற்கும், அவரது மாமனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சஜன் தனது 15 வயது மற்றும் 17 வயது மகனுடன் சேர்ந்து ஷியாமை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் பலியானார்.
இதையடுத்து சஜன் மகன்களுடன் சேர்ந்து ஷியாமின் உடலை வீட்டில் இருந்து சற்று தொலைவில் வீசி உள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள சஜனின் இன்னொரு மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story