வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.7¼ லட்சத்தில் நிவாரண பொருட்கள் கலெக்டர் அனுப்பி வைத்தார்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு, நாகையில் இருந்து ரூ.7¼ லட்சத்தில் நிவாரண பொருட்கள் 2 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
நாகப்பட்டினம்,
நாகையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பொதுமக்கள், வணிகர்கள், மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பங்களிப்புடன் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக 2 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வாகனங்களை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளா மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு, உடமைகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்து உள்ளனர். அவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு நிவாரண பொருட்களாக, அரிசி, சீனி, பருப்பு வகைகள், உப்பு, மளிகை பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள், பிஸ்கட்டுகள், வேட்டிகள், சேலைகள், சுடிதார்கள், நோட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொதுமக்கள், வணிகர்கள், மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரிடம் இருந்து வாங்கப்பட்டன.
நாகை மாவட்டம் சார்பில் முதற்கட்டமாக ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 972 மதிப்பிலான நிவாரண பொருட்களும், கேரளா முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்காக அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்து சார்பாக ரூ.2 லட்சத்திற்கான வங்கி வரைவோலையும் அனுப்பப்படுகிறது. இந்த பொருட்களையும், வரைவோலையும் கொண்டு செல்ல 2 துணை தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிவாரண பொருட்கள் கேரளா மாநிலம் வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (அதாவது இன்று) ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், நாகை சப்-கலெக்டர் கமல் கிஷோர், தாசில்தார் இளங்கோவன், தனி தாசில்தார் தமிமுன் அன்சாரி (பேரிடர் மேலாண்மை) ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story