சம்பளம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதம்


சம்பளம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:30 AM IST (Updated: 22 Aug 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அங்கன்வாடி ஊழியர்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.

புதுச்சேரி,

புதுவை அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அவர்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்துக்கு சங்க தலைவி பரமேஸ்வரி தலைமை தாங்கினார்.

செயல் தலைவர் ஆனந்தராஜ் வாழ்த்தி பேசினார். உண்ணாவிரதத்தில் சங்க கவுரவ தலைவர் திலகம், செயலாளர் தமிழரசி, பொருளாளர் பூங்கோதை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story