கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பி வைத்தார்


கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:15 AM IST (Updated: 22 Aug 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.17 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான 14 வகையான நிவாரண பொருட்கள் கடந்த 18–ந் தேதி அன்று அனுப்பிவைக்கப்பட்டது.

கரூர்,

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.17 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான 14 வகையான நிவாரண பொருட்கள் கடந்த 18–ந் தேதி அன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா சார்பில் வழங்கப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன், கீதா எம்.எல்.ஏ. ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரியின் மூலம் நேற்று அனுப்பிவைத்தனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நெரூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.மணிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story