மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு


மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 22 Aug 2018 3:29 AM IST (Updated: 22 Aug 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் நசீர் (வயது 26). சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அங்குள்ள ஒரு ஏரிக்கரையோரம் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு, தனது அண்ணனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். நசீர் மயங்கிய நிலையில் கிடந்தார். உனடியாக அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story