புனேயில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி
புனேயில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானார்கள். 6 பேர் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புனே,
மும்பை உள்பட மராட்டியத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு நாக்பூர், நாசிக், பிம்பிரி சிஞ்வட், கோலாப்பூர் ஆகிய இடங்களில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், புனேயில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகி உள்ளனர். புனே மாடல் காலனியை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சயாத்ரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
டாக்டர்கள் பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதேபோல உஸ்மனாபாத்தை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த நிலையில் புனே லோகேகாவை சேர்ந்த 23 வயது இளம்பெண், ஹடப்சரை சேர்ந்த 55 வயது பெண், தயாரியை சேர்ந்த 38 வயது நபர் மற்றும் சத்தாரா, அகமதுநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என 6 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புனேயில் உள்ள வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story