அலைவ்கோரின் கார்டியாமொபைல்


அலைவ்கோரின் கார்டியாமொபைல்
x
தினத்தந்தி 22 Aug 2018 12:51 PM IST (Updated: 22 Aug 2018 12:51 PM IST)
t-max-icont-min-icon

இனி வீட்டிலேயே இசிஜி எடுத்துக்கொள்ளலாம்.

லேசா படபடப்பு இருக்கு.. டாக்டர் கிட்ட போனா “இசிஜி எடுங்க.. லேபுக்கு போங்கன்னு சொல்வாரு” என்று இனி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் இனி வீட்டிலேயே இசிஜி எடுத்துக்கொள்ளலாம். அதற்கு ‘அலைவ்கோர்’ என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் ‘கார்டியாமொபைல்’ என்று ஒரு சின்ன கருவி உதவுகிறது.

முதலில் நமது ஸ்மார்ட் போனில் கார்டியா ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். கார்டியாமொபைல் கருவியை நமது போனின் முன்பு வைத்த பின்னர் இந்த கருவியில் நமது இரண்டு விரல்களையும் இருபுறமும் அதற்கென கொடுக்கப்பட்ட இடத்தில் வைக்கவேண்டும். முப்பது நிமிடங்கள் கழித்து, நமது இசிஜி பதிவுகள் நம்முடைய போன் ஸ்கிரீனில் தெரியும். அத்துடன் இசிஜி இயல்பாக உள்ளதா அல்லது ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதையும் விளக்கிவிடும். மேலும் டாக்டரிடம் செல்லும் போது, இந்த இசிஜி ரிப்போர்ட்டை அப்படியே பிரிண்ட் அவுட்டாகவும் எடுத்துக்செல்லலாம்.

ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் டேப்லெட் என எல்லா இயங்குதளங்களிலும் இந்த கார்டியாமொபைல் கருவி வேலை செய்கிறது. கார்டியாமொபைல் கருவியை போனின் பின்புறத்தில் பொருத்திக்கொள்வதற்கு ஒரு கிளிப்பும் (நீறீவீஜீ) கொடுத்துள்ளனர். இக் கருவி இணைக்கப்பட்ட போன் கேஸ்களும் கிடைக்கின்றன. இருதய மருத்துவர்களும் இக்கருவியை வரவேற்கின்றனர். இசிஜிக்காக லேபிற்கு அலைந்து காத்திருக்கும் வேலையும் மிச்சம். நமது பணமும் மிச்சம். இந்த கருவியின் விலை சுமார் 6800 ரூபாய்.

Next Story