கார் ஏ.சி.யில் கவனம் தேவை
வெயில் அதிகமாக இருக்கும் போது காரில் பயன்படுத்தும் ஏ.சி.க்களில் கவனம் தேவை.
வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தியிருந்த காரை ஸ்டார்ட் செய்தவுடன் ஏ.சி.யை ஆன் செய்தால், உடனே ஜன்னல் கதவுகளை மூடக்கூடாது. காரினுள் இருக்கும் வெப்பம் வெளியேறும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
ஏனெனில் காரில் உள்ள பிளாஸ்டிக் பாகங்கள் ‘பென்சீன்’ எனப்படும் நஞ்சை உமிழ்கின்றன. இது புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது.
இதனால் ஏ.சி.யை ஆன் செய்து காரினுள் இருக்கும் வெப்பக்காற்று வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு ஜன்னலை மூடி பயணத்தைத் தொடரலாம்.
இதேபோல நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரில் ஏ.சி.யை போட்டு தூங்கக்கூடாது. ஏனெனில் கார் என்ஜின் ஓடும்போது கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். இது காருக்குள் பரவி உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.
Related Tags :
Next Story