நெல்லை முக்கிய பிரமுகர் என கூறி அ.தி.மு.க. பெண் எம்.பி.யிடம் செல்போனில் ஆபாச பேச்சு போலீசார் தீவிர விசாரணை


நெல்லை முக்கிய பிரமுகர் என கூறி அ.தி.மு.க. பெண் எம்.பி.யிடம் செல்போனில் ஆபாச பேச்சு  போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 22 Aug 2018 9:00 PM GMT (Updated: 22 Aug 2018 2:01 PM GMT)

நெல்லை முக்கிய பிரமுகர் என கூறி அ.தி.மு.க. பெண் எம்.பி.பிடம் ஆபாசமாக பேசியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெல்லை, 

நெல்லை முக்கிய பிரமுகர் என கூறி அ.தி.மு.க. பெண் எம்.பி.பிடம் ஆபாசமாக பேசியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெண் எம்.பி.யிடம் ஆபாச பேச்சு 

சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பெண் எம்.பி. ஒருவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர் நெல்லையை சேர்ந்த வி.ஐ.பி. என அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் பேசும் போது, பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசி பெண் எம்.பி.க்கு தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது உதவியாளர்களிடம் நடந்த விசயத்தை கூறி விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

அவர்கள் அந்த வி.ஜ.பி.யிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அவர், நான் அதுபோல் பேசவில்லை யாரோ எனது பெயரை பயன்படுத்தி பேசி உள்ளனர் என்றார். தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.யின் செல்போனில் பதிவான நெல்லை வி.ஐ.பி. செல்போண் எண்களில் உதவியாளர்கள் பேசினர். அதில் ஒருவர் மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். பின்னர் அவரது செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

போலீசார் தீவிர விசாரணை 

இது குறித்து நெல்லையை சேர்ந்த வி.ஐ.பி. ஒருவர், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், “நெல்லையை சேர்ந்த ஒருவர் சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் எம்.பி.யிடம், ஆபாசமாக பேசியுள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த புகார் மனு மீது பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். சைபர் கிரைம் மூலமாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story