திருவட்டார் அருகே மளிகை கடைக்காரருக்கு கத்திக்குத்து 3 ரவுடிகளுக்கு வலைவீச்சு
திருவட்டார் அருகே மளிகை கடைக்காரரை கத்தியால் குத்திய வழக்கில் 3 ரவுடிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜெபக்குமார் (வயது 50). இவர் வேர்கிளம்பி சந்திப்பில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்டாலின் ஜெபக்குமார் வீட்டில் இருந்து கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் பூவன்கோடு பகுதியில் சென்றபோது, முளவிளை பகுதியை சேர்ந்த ஜோஸ் (24) மற்றும் அவருடைய தம்பிகள் சுபின்(22), யூஜின்(21) ஆகிய 3 பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த ஜோஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்டாலின் ஜெபக்குமாரை குத்தினார். பின்னர், அருகில் நின்ற 2 ஆட்டோக்களையும் சேதப்படுத்திவிட்டு 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஜோஸ் உள்பட 3 பேர் மீது திருவட்டார் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story