மத்திய அரசு, தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு


மத்திய அரசு, தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Aug 2018 4:00 AM IST (Updated: 23 Aug 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு, தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

திருவாரூர்,

காவிரி டெல்டா கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. தமிழக அரசு நீர் மேலாண்மை பணியில் தோற்றுவிட்டது. அக்டோபர் 2-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில், நீர் மேலாண்மை திட்டங்களை மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வலியுறுத்தப்படும். தமிழகத்துக்கு தர வேண்டிய 97 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகத்திடம் தமிழக அரசு கேட்டு பெற வேண்டும்.

உபரியாக மேட்டூர் அணைக்கு தண்ணீரை ஏற்கனவே வழங்கிவிட்டதாக கர்நாடக அரசு தெரிவிக்கும். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு உரிமையை விட்டு கொடுக்கக் கூடாது.

காவிரி டெல்டாவை ரசாயன மண்டலமாக்கி இயற்கை வளங்களை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 55 இடங்களில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை எடுக்க அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்குவதற்காக தமிழக விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க இடைக்கால தடை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இது இடைக்கால மகிழ்ச்சி மட்டுமே. தமிழக அரசு இந்த தடையை உடைக்க முயற்சி மேற்கொள்ளலாம், அதனை கோர்ட்டு ஏற்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story