விளம்பர பலகைகள் வைக்க தடை விதிப்பது அவசியம் - ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
கர்நாடகம் முழுவதும் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிப்பது அவசியம் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விளம்பர பலகைகளை அகற்றும்படி கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் 3 பொதுநல வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும்படி கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி பெங்களூரு நகரில் பெரும்பாலான பகுதிகளில் சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெங்களூரு மாநகராட்சி மற்றும் கர்நாடக அரசின் வக்கீல்கள் ஆஜராகி இருந்தனர். விசாரணை தொடங்கியதும், தலைமை நீதிபதி, சர்வதேச விமான நிலைய சாலையில் விளம்பர பலகைகள் இன்னும் அகற்றாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் உதய்ஹொல்லா, “அந்த பகுதிகள் கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வருகின்றன. விமான நிலைய பகுதி 9 கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வருகின்றன“ என்றார். அப்போது நீதிபதிகள், “பெங்களூருவில் விளம்பர பலகைகள் அகற்றப்படுகின்றன. அதே போல் கர்நாடகம் முழுவதும் விளம்பர பலகைகளை வைக்க தடை விதிக்க வேண்டியது அவசியம். பெங்களூருவை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளை இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். கர்நாடகம் முழுவதுக்கும் விளம்பர பலகை கொள்கையை மாநில அரசு வகுக்க வேண்டும். வருகிற 31-ந் தேதிக்குள் பெங்களூருவில் விளம்பர பலகைகளை அகற்றும் பணியை முடிக்க வேண்டும்“ என்று கூறினர்.
பெங்களூரு மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் ஸ்ரீநிதி, “ஐகோர்ட்டு உத்தரவுப்படி பெங்களூருவில் சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. சில நிறுவனங்கள் விளம்பர பலகைகளை அகற்ற இடைக்கால தடை ஆணையை பெற்றுள்ளன. இது தொடர்பாக தொடரப்பட்ட 112 வழக்குகளில் 44 வழக்குகளில் இடைக்கால தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவில் கோர்ட்டுகளில் தொடரப்பட்டுள்ள 90 வழக்குகளில் 26 வழக்கில் இடைக்கால தடை ஆணை உள்ளது. வழக்கு தொடர்பான விளம்பர பலகைகளை அகற்ற முடியவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு நகரில் விளம்பர பலகைகளுக்கு அனுமதி வழங்கவில்லை. விளம்பர பலகைகளை அகற்றுவது தொடர்பாக அனுப்பிய நோட்டீசுக்கு 1,192 ஆட்சேபனைகள் வந்துள்ளன. இந்த ஆட்சேபனைகள் மீது வருகிற 27-ந் தேதிக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 31-ந் தேதிக்குள் விளம்பர பலகைகள் கொள்கை வகுக்கப்படும்“ என்றார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related Tags :
Next Story