நீர் வரத்து குறைந்ததால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் மணல் திட்டுகள் தெரிய தொடங்கின
நீர் வரத்து குறைந்ததால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் மணல் திட்டுகள் தெரிய தொடங்கின. இரும்பு பாலத்தில் இடிந்து விழுந்த பாகங்களை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
திருச்சி,
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 19-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையினால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. அதிக பட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த வாரம் மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது.
மேட்டூர் அணையில் அதன் முழு கொள்ளளவான 120 அடிக்கு மேல் தண்ணீர் சேமித்து வைக்க முடியாது என்பதால் கர்நாடக அணைகளில் இருந்து வந்த உபரி நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. கேரள மாநிலத்தில் பெய்த பலத்த மழையினால் பவானி மற்றும் அமராவதி அணைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் காவிரியில் கலந்தன. இதனால் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை வழியாக வினாடிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் முக்கொம்பு மேலணையை அடைந்தது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு அதிக பட்சமாக 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் அதிக பட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப் பட்டது. இதன் காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர கிராமங்களில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையின் அனைத்து படிக்கட்டுகளையும் மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றதால் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அம்மா மண்டபம் படித்துறை ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு அங்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது மற்றும் பரிகார பூஜைகள் நடத்தி வந்த புரோகிதர்களும் வெளியேற்றப்பட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்பு பாலத்தின் 18-ம் எண் தூணில் மணல் அரிப்பினால் விரிசல் ஏற்பட்டது. அந்த தூணும் 19-ம் எண் தூணும் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முழுவதுமாக ஆற்றுக்குள் இறங்கின. இதனால் இந்த 2 தூண்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் தரைப்பகுதிகள் மற்றும் இரும்பு பாளங்கள் (கர்டர்) எல்லாம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இரும்பு பாலத்தின் 20-வது தூணும் சேதம் அடைந்து பாதி அளவு ஆற்றுக்குள் இறங்கிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் குறைந்து விட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 562 கன அடி தண்ணீர் வந்தது. இங்கிருந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரத்து 67 கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 8 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
நீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் புதன்கிழமையன்று பேரிரைச்சலுடன் சீறிப்பாய்ந்த காவிரி, கொள்ளிடம் ஆறுகள் நேற்று அவற்றின் சீற்றம் குறைந்து அமைதியான நிலையில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. காவிரியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, காவிரி புதுப்பாலம் பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் சென்றாலும் சென்னை பைபாஸ் சாலை பகுதியில் காவிரி ஆற்றின் நடு பகுதியில் மீண்டும் மணல் திட்டுகள் தெரிகின்றன. செடி, கொடிகள் புதர்களும் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டன. இதே போல் தான் கொள்ளிடம் ஆற்றிலும் மணல் வெளியே தெரிகிறது.
இரும்பு பாலம் இடிந்து விழுந்த பகுதியில் அதன் தூண்களை எந்த அளவிற்கு தண்ணீர் அரித்து சென்றன என்பது தெளிவாக தெரிகிறது. பாலத்தின் இடி பாடு பகுதிகள், ஒரு இரும்பு பாளம் ஆகியவை அதன் அருகிலேயே கிடக்கின்றன. ஆனால் மற்ற இரும்பு பாளங்கள் எங்கே? அவற்றை தண்ணீர் நீண்ட தூரம் இழுத்து சென்று விட்டதா? அல்லது மணலில் சொருகி கிடக்கிறதா? என தெரியவில்லை. பாலம் இடிந்து விழுந்த பகுதியில் தற்போது மணல் திட்டுகள் அதிக அளவில் தெரிவதால் இதனை பார்ப்பதற்கு பொது மக்கள் மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் கொள்ளிடம் புதிய பாலம் மீண்டும் சுற்றுலா தலம் போல் காட்சி அளிக்கிறது.

Related Tags :
Next Story